உத்திரபிரதேசத்தில் அதிகாலையில் நடந்த விபத்து.. 6 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே யமுனா விரைவுச் சாலையில் இன்று (பிப்.07) அதிகாலை நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 2.45 மணியளவில் சுரிர் காவல் நிலைய எல்லை அருகே, வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த பயணிகளை மோதியது. படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி