கண்டெய்னர் கார் மீது மோதிய விபத்தில் 6 பேர் பலி

ஆந்திராவில் கண்டெய்னர் லாரி கார் மீது மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் இருவாரம் அருகே இன்று (பிப்., 13) கண்டெய்னர் லாரி, எதிரே வந்த கார் மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இதில், காரில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். 
அங்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி