சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில், திருவள்ளூரில் இன்று (ஜூலை 13) அதிகாலை தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. பெட்ரோலியே பொருட்களை ஏற்றிச் சென்றதால் ரயில் தடம்புரண்டதும் தீ பற்றிக்கொண்டது. தீயை அணைக்க சுமார் 6 மணிநேரமாக தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் இணைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சேதமடைந்த பெட்டிகளை அகற்றி ரயில் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.