மேற்காசியா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று (மார்ச் 4) 30 இண்டிகோ, 23 ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என மொத்தம் 58 விமானங்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “கள நிலவரத்திற்கு ஏற்ப இந்தியா - வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன” என மத்திய விமான துறை தெரிவித்துள்ளது.