தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், மே 20-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 55 நாட்கள் பொதுத்தேர்வு தேர்வு விடுமுறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.