டாஸ்மாக் கடைகளில் அறிமுகமாகும் 54 புதிய பிராண்ட் மது வகைகள்

மதுப்பிரியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, பிற மாநிலங்களில் இருந்து 54 புதிய உயர் ரக மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை இறக்குமதி செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது 100 பிராண்டுகள் விற்பனையில் உள்ள நிலையில், நுகர்வோரின் விருப்பத்திற்கேற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிகள் தீவிரப்படுத்தப்பட்டு, இறுதி ஒப்புதல் பட்டியல் விரைவில் வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி