லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 53 பேர் உயிரிழப்பு

லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு சிறிய ரப்பர் படகில் பயணித்த ஆப்பிரிக்க அகதிகள் கடலில் மூழ்கி 53 பேர் உயிரிழந்தனர். அடிப்படை வசதிகளற்ற அந்த படகில் அளவுக்கு அதிகமான நபர்கள் பயணித்ததே இந்த கோர விபத்திற்கு காரணமாக கருதப்படுகிறது. இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை இந்த ஆபத்தான கடல் வழித்தடத்தில் மட்டும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி