5000 ஆண்டுகள் பழமையான கோட்டை கண்டுபிடிப்பு

ருமேனியா நாட்டின் நீம்ட் மாவட்டம் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லேசர் ஸ்கேனிங் தொழில்நுட்பம் மூலம் காடுகளை சேதப்படுத்தாமல் அதன் முழு அமைப்பு வரைபடமாக்கப்பட்டது. அகழிகள், மண் மேடுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளதால், அக்கால மனிதர்கள் உயர்ந்த பொறியியல் திறனும் ஒழுங்கமைக்கப்பட்ட நாகரிகமும் கொண்டிருந்தது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி