தமிழக காவல்துறையின் ஊர்க்காவல் படையில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 50 திருநங்கையர் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜன.13) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 7 திருநங்கையருக்கு ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். இதன் மூலம் தமிழகத்தில் இனி போக்குவரத்து மேலாண்மை மற்றும் பாதுகாப்பு பணிகளில் திருநங்கையரும் தங்களின் பங்களிப்பை வழங்க உள்ளனர்.
நன்றி:NewsTamil24/7