அரசுப்பள்ளி வளாகத்தில் தேனீக்கள் கொட்டி 50 மாணாக்கர்கள் காயம்

கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே அரசுப் பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் 50 மாணவர்கள் காயமடைந்தனர். பள்ளி வளாக வேப்ப மரத்திலிருந்த தேன்கூட்டைச் சில மாணவர்கள் விளையாட்டாகக் கல்லால் அடித்துக் கலைத்துள்ளனர். இதனால் கலைந்த தேனீக்கள் வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களைக் கொட்டின. அலறியடித்து ஓடிய மாணவர்களை ஆசிரியர்களும் பொதுமக்களும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி