இந்தியர்கள் சோஷியல் மீடியாக்களில் செலவிடும் நேரம் குறித்து BofA Global Research நடத்திய ஆய்வில் வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் ஒரு மாதத்தில் சராசரியாக 49.42 மணிநேரத்தை (சுமார் 50 மணிநேரம்) இன்ஸ்டாகிராமில் செலவிடுகின்றனர். மேலும், யூடியூப், ஃபேஸ்புக், ஃப்ரீ ஃபயர் மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய செயலிகளிலும் அதிக நேரத்தைச் செலவிடுவது தெரியவந்துள்ளது.