நேபாளம்-திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 939 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு இடிபாடுகளில் சிக்கி 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் சூழலில், இடிபாடுகளுக்குள் இருந்து 2 நாட்களுக்கு பிறகு 5 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி: பிபிசி