ஒரே பைக்கில் 5 பேர் பயணம்.. சிறுமி உள்பட இருவர் பலி

திருவண்ணாமலை வந்தவாசி அருகே பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிறுமி உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மும்முனி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன், அவரது மனைவி பத்மா, மகள் சுபாஷினி, மனைவியின் தங்கை பானுமதி, மோகனாஸ்ரீ ஆகிய ஐந்து பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாத்தமங்கலம் கிராமம் அருகே இருந்த பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பானுமதி மற்றும் மோகனாஸ்ரீ (4) ஆகியோர் உயிரிழந்தனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி