மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நேரிட்ட பயங்கர கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சியிலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த கார், சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான 3 பெண்கள் உட்பட 5 பேரின் உடல்களையும் மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: நியூஸ் தமிழ்