திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் குளிக்க சென்ற அரசு காப்பகத்தை சேர்ந்த 4 மாணவிகள் மற்றும் விடுதி பாதுகாவலர் தேன்மொழி உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏரிக்கு குளிக்க சென்ற குழந்தைகள் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று தவித்த நிலையில், அவர்களை காப்பாற்ற சென்ற தேன்மொழியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:SunNews