தெலங்கானா: நிர்மல் மாவட்டம் பாசார் பகுதியில் கோதாவரி ஆற்றில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 3 குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் ஸ்ரீ ஞான சரஸ்வதி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கோதாவரி ஆற்றில் புனித நீராடிய போது, ராகேஷ் (17), வினோத் (18), மதன் (18), ருத்விக் மற்றும் பரத் (24) ஆகிய ஐந்து இளைஞர்களும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.