கடலூர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த துரைராஜ் (27), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அதே நிறுவனத்தில் பணிபுரிந்த திண்டிவனத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதாகக் கூறி அப்பெண்ணிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். பின்னர், துரைராஜ் பெண்ணுடன் பேசுவதைத் தவிர்த்து, திருமணம் செய்ய மறுத்து, பணத்தையும் தராமல் ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் துரைராஜை கைது செய்தனர்.