தமிழ்நாட்டில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (மே.31) அதிகபட்சமாக வேலூரில் 106°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் திருச்சி, திருத்தணி, சென்னை, கரூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், காரைக்கால், ஈரோடு, நெல்லை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 100°F-க்கும் அதிகமான வெப்பம் நிலவியது. கடும் வெயிலால் பொதுமக்கள் அவதியடைந்த நிலையில், தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.