ஆந்திராவில் வெடி விபத்தில் 5 பேர் பலி

ஆந்திரப் பிரதேசம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் சாலை பணிகளுக்காக பயன்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் பொருத்தப்பட்ட சாதனம் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த எதிர்பாராத கோர விபத்தில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டதோடு, இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕