நைனிடாலில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் பவாலி பைபாஸ் பகுதியில் 5 பேர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். சம்பவமறிந்து விரைந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி