தென்மேற்கு ஈக்வடாரில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், புவேர்ட்டோ லோபஸ் கடற்கரையில் 5 மனித தலைகள் கயிறுகளில் தொங்கவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஈக்வடார் நாட்டு பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து, வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.