உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில், தேநீர் அருந்துவதற்காக 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஏழு நண்பர்கள் மீது கார் மோதியதில் பெரும் விபத்து நேரிட்டது. இதில் குஃப்ரான், சலீம், ரஹ்மத், தௌஃபிக் மற்றும் ஃபாரூக் ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த முஜம்மில் மற்றும் நஹித் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.