உகாதி விடுமுறையை ஒட்டி பத்ராச்சலம் கோயிலுக்குச் சென்றுவிட்டு கோதாவரி ஆற்றில் குளிக்கச் சென்ற அமராவதியைச் சேர்ந்த 5 பி.டெக் மாணவர்கள், நீரின் ஆழம் தெரியாமல் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் சென்ற 2 பேர் நீச்சல் தெரிந்ததால் உயிர் தப்பினர். உயிரிழந்தவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.