திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்க 5 பேர் போட்டிப்போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.எஸ்.விஜயகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயச்சந்திரன், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முல்லைவேந்தன், ஒன்றிய கழக செயலாளர் கோபால், ஒன்றிய கழக துணை செயலாளர் சுதாகர் ஆகியோர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர். இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.