அந்தமான் அருகே ரிக்டர் 5.3 நிலநடுக்கம்: பாதிப்பு குறித்த தகவல் இல்லை

புதுடெல்லி: அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை 2.46 மணியளவில் ரிக்டர் அளவில் 5.3 மெக்னிட்யூட் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 82 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 13.163 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 93.779 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி