அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 5.0 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் ஜன்னல் உடைந்து நொறுங்கியிருக்கின்றன. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மன்ஹாட்டன் கடற்கரைக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது பூமிக்கு அடியில் கிட்டதட்ட 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕