ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 4ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில் நேற்று மயங்கி விழுந்து இறந்தார். மரணத்திற்கான காரணம் மாரடைப்பாக இருக்கலாம் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். பிராச்சி குமாவத் (9) என்ற அந்த மாணவி ஆரோக்கியமாக இருந்ததாகவும், உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு வழங்க குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.