நாடு முழுவதும் நேற்று (ஜூன் 6) ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இதுவரை 5,365 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் ம.பி., மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.