496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம்

496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (பிப்., 17) வேளாண் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி