பராமரிப்பு பணி நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் இன்று (நவ., 23) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்றும் 8 விரைவு ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.55, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி