மகள்களின் கல்விக்காக வெறும் காலில் மாரத்தான் ஓடிய 47 வயது பெண்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர் (47) என்ற பெண், கணவரை இழந்த நிலையில் மகள்களின் கல்விச் செலவுக்கு உதவ உள்ளூர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். ஷூக்கள் இன்றி சேலை கட்டி வெறும் காலிலேயே ஓடி முதலிடம் பிடித்து ரூ.3,000 பரிசுத்தொகையை வென்று அசத்தினார். இப்போட்டியில் 2-ம் இடம் பிடித்த அவரது இளைய மகளின் படிப்புச் செலவை ஏற்பதாகக் கல்வி மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி