பாகிஸ்தானில் தொடர் மழைக்கு 45 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர்பக்துன்க்வா மாகாணத்தில் மார்ச் 25 முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 23 குழந்தைகள் உள்பட 45 பேர் பலியாகியுள்ளனர்; 105 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 60 வீடுகள் முழுமையாகவும், 382 வீடுகள் பகுதியளவும் என மொத்தம் 442 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி