தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்ட 42 பேர், பேருந்து விபத்தில் இன்று (நவ.17) உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது X தளத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,"42 பேர் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.