மத்தியபிரதேசத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய சுகாதார இயக்கம் விரிவான அறிக்கை கோரியுள்ளது. தாமதமாக கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படுவது, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, பிறவிக் குறைபாடுகள் மற்றும் பிரசவ சிகிச்சை தாமதம் உள்ளிட்ட காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி