சிறுவனுக்கு பாலியல் தொல்லை - 40 வயது பெண்ணுக்கு சிறை

திருவாரூர் மாவட்டம் தேதியூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கன்வாடி சமையல் உதவியாளர் லலிதா, 2021 அக்டோபர் 26 அன்று 15 வயது மாணவனை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், கைது செய்யப்பட்ட லலிதாவுக்கு மொத்தம் 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பள்ளி சிறுவனுக்கு ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி