மகாராஸ்டிரா: மும்பையில் பிரபலமான பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளி ஆசிரியை பிபாஷா குமார் (40), பத்தாம் வகுப்பு மாணவனை சொகுசு ஓட்டல்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்த வழக்கில் கைதானார். இந்நிலையில், அவர் ஜாமின் கேட்டு மும்பை போக்சோ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மாணவன் தான் என்னை கண்மூடித்தனமாக காதலித்தான். அந்த மாணவன் என்னை மனைவி என்று கூட அழைத்தான் என்று பிபாஷா குமார் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.