காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா முனையில் நேற்று (ஜூலை 9) இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 40 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57,575 ஆக அதிகரித்துள்ளது.