தலைகுப்புற கவிழ்ந்த மினி பஸ்.. 40 பேர் காயம்

மதுரை வாடிப்பட்டி அருகே நேற்று (நவ., 04) மினி பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயமடைந்தனர். இந்தப் பேருந்தில் 45 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், பேருந்து பாண்டியராஜபுரம் ரயில்வே கிராசிங் அருகே சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 40 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி