தூத்துக்குடியில் மின்னல் தாக்கி 4 இளைஞர்கள் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், முள்ளக்காடு, கோவளம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் திடீரென மின்னல் தாக்கி காயமடைந்தனர். காயமடைந்த இளைஞர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி