மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது.. ஆயுதங்கள் பறிமுதல்

மணிப்பூரில் 2023ல் இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. பின்னர், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரின் கிழக்கு இம்பால், தவ்பெல் மாவட்டங்களில் பாதுகாப்புப்படையினர் அதிரடி சோதனை நடத்தி, பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி