நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 4 மீனவர்கள் 02-11-2025 அன்று மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ரூ.10,000 அபராதம் செலுத்தி விடுதலை செய்யப்பட்டனர். இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மூலம் அபராதத் தொகை செலுத்தப்பட்டது. பின்னர் அவர்கள் இந்திய கடலோர காவல் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு, வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறைக்கு அழைத்து வரப்பட்டனர்.