கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நவுசாத், பயாஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். வெளிநாடு சென்ற சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்படவில்லை. ஒருவரோ முன்பே உயிரிழந்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.