தெலங்கானாவில் டிராக்டர் கவிழ்ந்து 4 பேர் பலி

தெலங்கானா ஜக்தியால் மாவட்டம் மல்லாபூர் அருகே மஞ்சள் அறுவடைக்கு சென்ற 20 பெண்கள் டிராக்டரில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டது. குளத்தின் கரையில் குறுகிய வளைவில் திரும்பிய போது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பங்கி சாய்ம்மா (35), லலிதா (42), வைஷ்ணவி (13), பெட்டி ரெட்டி கங்கு (32) ஆகிய 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி