உ.பி: ஆக்ரா சிக்கந்திரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேப்பூர் கிராமம் அருகே யமுனை நதியில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்தனர். குளிக்க சென்ற 6 சிறுமிகளில் 4 பேர் திடீரென நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, டைவர்ஸின் உதவியுடன் உடல்களை மீட்டனர். இதில் 2 சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.