நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேம்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் கட்டிப்போட்டிருந்த ஆட்டை, வனப்பகுதியில் இருந்து இறங்கிய சிறுத்தை வேட்டையாடி தூக்கிச் சென்றது. இதேபோல் விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது வீட்டில் இருந்த ஆட்டையும் சிறுத்தை கடித்து தாக்கியது. இந்நிலையில், கடந்த 19-ந்தேதி வனத்துறையினர் வைத்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது. மேலும் அனவன்குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் நேற்றிரவு பெண் சிறுத்தை ஒன்று சிக்கியது. இதைத் தொடர்ந்து, வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் இன்று (மே12) மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது.