நாமக்கல் குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கலை நிகழ்ச்சி ஒத்திகையின் போது விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி ரக்ஷிதா (9) பரிதாபமாக உயிரிழந்தார். ஒத்திகையில் பங்கேற்றிருந்த மாணவியை விஷப்பூச்சி கடித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பள்ளி வளாகத்தில் புதர்கள் சரியாக அகற்றப்படாததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.