39 வயது பெண்ணுக்கு சரமாரியாக கத்திக்குத்து

சென்னையை அடுத்த மாங்காட்டில் 39 வயது மதிக்கத்தக்க பெண்ணை, சம்பத் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். படுகாயமடைந்த அப்பெண் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே தாக்குதல் நடத்திய சம்பத் கத்தியுடன் மாங்காடு காவல் நிலையத்தில் தானாகவே சென்று சரணடைந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், திருமணத்தை மீறிய உறவு விவகாரமே இந்த கொடூரத் தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕