மத்திய நைஜீரியாவின் பிளேட்டுயே மாநிலத்தில் உள்ள ஒரு ஈயச்சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பஷார் மாவட்டத்தில் உள்ள கம்பனின் சூராக் சுரங்கத் தளத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் மேலும் 27 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் இதற்கு முன்பு இதேபோன்ற பல விபத்துக்களில் சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.