37 பேர் பலி.. 650 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

பெரு நாட்டில் 650 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற இரட்டை அடுக்குப் பேருந்து ஒன்று,  எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது. இதில், 37 பேர் உயிரிழந்த நிலையில், 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி