தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை http://arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கனரக வாகனம் ஓட்டும் உரிமம் வைத்திருக்க வேண்டும். தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், திருநெல்வேலி மண்டலங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.